மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி S.V.கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி ஓய்வு பெற்றார். அதனை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமிக்கப்பட்டார்.
இதையும் படியுங்கள் : ராஜஸ்தான் ராயல்ஸ் போராடி தோல்வி – 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அசத்தல் வெற்றி!
பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பணியாற்றி வரும் நிலையில், மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள S.V.கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட கங்காபூர்வாலா கடந்த டிசம்பர் மாதம் முதல் மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வருகிறார். அடுத்தாண்டு மே மாதம் 23ம் தேதி நீதிபதி கங்காபூர்வாலா ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.







