சச்சின் பைலட் முதலமைச்சராக எதிர்ப்பு, கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி

ராஜஸ்தானில் அசோக் கெலாட் ஆதரவு சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவி விலகப் போவதாக போர்க்கொடி உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அடுத்த மாதம் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் ராஜஸ்தான்…

ராஜஸ்தானில் அசோக் கெலாட் ஆதரவு சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவி விலகப் போவதாக போர்க்கொடி உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அடுத்த மாதம் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், நாடாளுமன்ற உறுப்பினர் ச சிதரூர் உள்ளிடோடர் போட்டியிடவுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் முதலமைச்சர் பதவியிலும் தொடர விரும்பிய அசோக் கெலாட்டுக்கு ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் முதலமைச்சர் பதவியில் இருந்து அசோக் கெலாட் விலகுவார் எனத் தெரிகிறது. இந்த சூழலில் அசோக் கெலாட்டின் அரசியல் எதிரியாக கருதப்படும் சச்சின் பைலட்டை முதலமைச்சராக காங்கிரஸ் தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அசோக் கெலாட் ஆதரவு சட்டப் பேரவை உறுப்பினர்கள் 90 பேர் சச்சின் பைலட்டை முதலமைச்சராக்கினால் பதவி விலகப் போவதாக எச்சரித்துள்ளனர். இதனால் ராஜஸ்தானில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய் மக்கான் மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் ஜெய்ப்பூர் விரைந்துள்ளனர். அவர்கள் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரையும் தனித்தனியே சந்தித்து பேசவுள்ளனர். அண்மையில் கோவா மாநில காங்கிரஸ் கூண்டோடு காலியான நிலையில், தற்போது ராஜஸ்தான் காங்கிரசிலும் பூகம்பம் வெடித்திருப்பது அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.