16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு…

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 16 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்களில், இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24ம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், 25 மற்றும் 26ம் தேதிகளில்,  தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று  வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.