முக்கியச் செய்திகள் தமிழகம்

16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு கடற்கரை மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், புதுச்சேரி மற்றும் சென்னை மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 26ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு பிற்பகலில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. அதுபோலவே, அடுத்த 48 மணி நேரத்திற்கு பிற்பகலில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

Nandhakumar

மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பில் அசத்தும் “மகிழ்” நிறுவனம்

Vandhana

இங்கிலாந்தில் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் தூய காற்று!

Jayapriya