ஆப்கன் கலவரத்திற்கு மத்தியில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்

ஆப்கானிஸ்தானில் தாயை பிரிந்து தவித்த 2 மாத குழந்தையை துருக்கி ராணுவத்தினர் கவனித்துக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், நாட்டின் எல்லைப் பகுதி அனைத்தும்…

ஆப்கானிஸ்தானில் தாயை பிரிந்து தவித்த 2 மாத குழந்தையை துருக்கி ராணுவத்தினர் கவனித்துக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், நாட்டின் எல்லைப் பகுதி அனைத்தும் மூடப்பட்டுள்ளன. காபூல் விமான நிலையம் மட்டுமே நாட்டை விட்டுச் செல்வதற்கான ஒரே வழியாக உள்ளது. இந்த சூழலில்தான் ஆப்கனை விட்டுச் செல்லும் அமெரிக்க ராணுவத்தினரிடம் பலர் தங்களின் குழந்தைகளைக் கொடுக்கும் காட்சிகள் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காபூல் விமான நிலையம் அருகே ஏற்பட்ட இந்த கலவர சூழல் காரணமாக காணாமல் போன தனது மனைவியை 2 மாத கைக்குழந்தையுடன் அலி மூசா ரஹ்மானி என்பவர் தேடிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த துருக்கி ராணுவத்தினர் அவருக்கு உதவும் விதமாக குழந்தையையும் தந்தையையும் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்று குழந்தைக்கு பாலூட்டி, சுத்தம் செய்து, மீண்டும் தந்தையிடமே ஒப்படைத்தனர்.

மேலும் இந்த கலவரத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு துருக்கி ராணுவத்தினர் உணவும் தண்ணீரும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.