காங்கிரஸில் இணைந்த பாஜக எம்பி ராகுல் கஸ்வான்!

ராஜஸ்தான் – சுரு தொகுதி எம்.பி ராகுல் கஸ்வான்,  பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் நெருகியுள்ள நிலையில், நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடை…

ராஜஸ்தான் – சுரு தொகுதி எம்.பி ராகுல் கஸ்வான்,  பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருகியுள்ள நிலையில், நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன.  இந்நிலையில்,  போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் பாஜகவில் இருந்து விலகிய ராஜஸ்தான் – சுரு தொகுதி எம்.பி ராகுல் கஸ்வான், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 

“அரசியல் காரணங்களுக்காக,  நான் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.  மக்களவை உறுப்பினராக 10 ஆண்டுகள் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்திருந்தார்.

https://twitter.com/RahulKaswanMP/status/1767083807109521854?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1767083807109521854%7Ctwgr%5E2b4b251180dbcc4811325dbb518e95a3ed905c89%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatv.in%2Frajasthan%2Frajasthan-rahul-kaswan-likely-to-join-congress-bjp-had-canceled-the-ticket-2024-03-11-1030110

சுரு மக்களவை தொகுதியில் 2 முறை எம்.பி. ஆக இருந்த ராகுல் கஸ்வானுக்குப் பதிலாக தேவேந்திர ஜஜாரியா போட்டியிட பாஜக சார்பில் சீட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.