2-வது ஒருநாள் போட்டி : இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கவுகாத்தியில் இன்று மதியம் 2 மணியளவில் தொடங்குகிறது

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி கடந்த செப்.27-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்ட் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்கிய விராட் கோலி சதமடித்து அசத்தினார். அதேபோல இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும் சதமடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் ஷர்மா 35 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இந்த நிலையில் இன்று இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கவுகாத்தியில் இன்று மதியம் 2 மணியளவில் தொடங்குகிறது. இந்தபோட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணியும், இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்ய ஆப்கானிஸ்தான் அணியும் முனைப்புக் காட்டம் என்பதால் இன்றைய போட்டியில் பரபரபுக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.