ராகுல் காந்தியின் ”ஒற்றுமைக்கான பயணம்” என்ற பாரத் ஜோடோ யாத்ரா நடைபயணமானது இன்று 100-வது நாளை எட்டியது.
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான பயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் இந்த பாத யாத்திரையை அவர் மேற்கொள்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வகுப்புவாதம், வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
இந்திய ஒற்றுமைப் பயணம் என்ற பெயரில் அவர் நடத்தி வரும் இந்த யாத்திரை கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானில் அவர் பாதயாத்திரையாக சென்று கொண்டிருக்கிறார்.
நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை இன்று 100வது நாளை எட்டியுள்ளது. தவுசா பகுதியில் 100-வது நாள் நடைபயணத்தை இன்று தொடங்கிய ராகுல் காந்தியுடன் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இன்னும் 50 நாட்களில் ராகுல் தனது இந்திய ஒற்றுமை பயணத்தை ஜம்மு காஷ்மீரில் தேசியக் கொடி ஏற்றி நிறைவு செய்யவுள்ளார்.