முக்கியச் செய்திகள் இந்தியா

மத்திய பிரதேசம்: 4 கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை

மத்தியபிரதேசத்தில் குவாலியர் மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு 4 கால்களுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியர் மாவட்டத்தில் சிக்கந்தர் கம்பூ பகுதியை சேர்ந்த ஆர்த்தி குஷ்வாஹா என்ற கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் 4 கால்களுடன் கூடிய குழந்தையை பெற்றார். பிரசவத்திற்குப் பிறகு, குவாலியரில் உள்ள ஜெயரோகா மருத்துவமனை குழுமத்தின் கண்காணிப்பாளருடன் டாக்டர்கள் குழு குழந்தையை பரிசோதித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து மருத்துவர் தாகத் கூறுகையில், குழந்தை 4 கால்களுடன் பிறந்துள்ளது. இதனை மருத்துவ அறிவியலில் இஸ்கியோபகஸ் என்று அழைக்கப்படுகிறது. கரு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படும் போது, உடல் பாகங்கள் இரண்டு இடங்களில் வளரும். இந்த பெண் குழந்தையின் இடுப்புக்கு கீழ் பகுதியில் கூடுதல் இரண்டு கால்களுடன் வளர்ந்துள்ளது. ஆனால் அந்த கால்கள் செயலற்ற நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

தற்போது உடல் உறுப்புகளில் வேறு ஏதேனும் குறைபாடு உள்ளதா என குழந்தைகள் நல பிரிவு மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர். பரிசோதனைக்குப் பிறகு, அவர் ஆரோக்கியமாக இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் அந்த கால்கள் அகற்றப்படும். அவ்வாறு அகற்றினால் அந்த குழந்தை ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ முடியும் என்று மருத்துவர் தாகத் கூறினார்.

குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அறுவை சிகிச்சை மூலம் கூடுதல் கால்களை அகற்றுவது குறித்து மருத்துவர்கள் ஆலோசித்து வருவதாகவும் கூறினார். தற்போது அந்த பெண் குழந்தை முற்றிலும் ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர் தாகத் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வேதாரண்யம் அருகே மைல் கல்லுக்கு சிறப்பு அபிஷேகம் செய்த சாலைப் பணியாளர்கள்

G SaravanaKumar

சென்னையை எதிர்கொள்ள தயாரானது கொல்கத்தா

G SaravanaKumar

முகக்கவசம் அணியாததால் அபராதம் – திடீரென நடனமாடிய இளம்பெண்

Halley Karthik