அக்னிபாத் திட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு – ராணுவத்தின் திறனை குறைக்கும் என ராகுல் கருத்து

மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒரு பக்கத்தில் பாகிஸ்தான் மூலமும் மற்றொரு பக்கத்தில் சீனா மூலமும்…

மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒரு பக்கத்தில் பாகிஸ்தான் மூலமும் மற்றொரு பக்கத்தில் சீனா மூலமும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவி வருவதை சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய சூழலில், மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டம், படைகளின் செயல் திறனைக் குறைத்துவிடும் என எச்சரித்துள்ளார்.

நமது ராணுவத்தின் கண்ணியம், பாரம்பரியம், வீரம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் சமரசம் செய்யும் இந்த முயற்சியை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல், அக்னிபாத் திட்டத்திற்கு பிரியங்கா காந்தியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அக்னிபாத் திட்டத்தை அறிவித்திருப்பதன் மூலம், மத்திய அரசு ராணுவத்தை பரிசோதனைக் கூடமாக மாற்றி இருப்பதாக விமர்சித்துள்ளார். ராணுவத்தை சுமையாக மத்திய அரசு கருதுகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.