புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, இறுதி வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான இறுதி வாக்காளர் பட்டியலை புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் மொத்தமாக 10,10,593 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 4,75,153 ஆண் வாக்காளர்களும், 5,35,320 பெண் வாக்காளர்களும், 120 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகளில் அதிக வாக்காளர்களை கொண்ட நகராட்சியாக உழவர்கரை நகராட்சி உள்ளது. அதில் மொத்தமாக 2,49,181 வாக்காளர்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
-ம.பவித்ரா







