அக்னிபாத் திட்டம்: ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணிபுரிய இளைஞர்களுக்கு வாய்ப்பு!

ராணுவத்தில் இளைஞர்களை அதிகம் சேர்ப்பதற்கான முயற்சியாக அக்னிபாத் எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.  இந்தத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.…

ராணுவத்தில் இளைஞர்களை அதிகம் சேர்ப்பதற்கான முயற்சியாக அக்னிபாத் எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.  இந்தத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
முப்படை தளபதிகள் மூலம் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடியிடம் இந்த திட்டம் குறித்து முப்படை தளபதிகள் கடந்த வாரம் விளக்கிய நிலையில் இன்று இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் 4 ஆண்டுகள் வரை ராணுவத்தில் சேர்ந்து பணிபுரியலாம். இந்த ஆண்டு 46,000 பேரை இந்தத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Image

இவர்கள் “அக்னி வீரர்கள்” என்று அழைக்கப்படுவார்கள். 4 ஆண்டு ராணுவச் சேவையை முடித்த பிறகு, ராணுவத்தில் வழக்கமான வேலைக்கும் இவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், மற்ற துறைகளிலும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அக்னிபாத் திட்டம் மூலம் இந்தியாவின் மொத்த ராணுவ வீரர்களின் பணி நியமனத்தில் 25% பேரை ஒப்பந்த முறையில் மத்திய அரசு மணியமர்த்த உள்ளது. இதன் மூலம் மூப்படையிலும் வீரர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

 இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ரூ.30,000 சம்பளத்தோடு, காப்பீடு, தங்குமிடம், உணவு என அனைத்து சலுகைகளும் கிடைக்கிறது.

பணியின்போது வீரருக்கு மரணம் ஏற்பட்டால் அவருக்கு ரூ. 48 லட்சம் வரையிலான  காப்பீட்டுத் திட்டம் அளிக்கப்படும்.

வயது தகுதி மற்றும் சம்பளம்

அக்னிபாத் திட்டத்தில் ராணுவ வீரர்களாக சேர்வதற்கு 17 1/2 வயது முதல் 21 வயதுடைய இளைஞர்கள் தகுதி கொண்டவர்கள் ஆவார்.

Image
முதலாம் ஆண்டு ரூ.30,000, இரண்டாம் ஆண்டு ரூ.33,000, மூன்றாவது ஆண்டு ரூ.36,500, நான்காவது ஆண்டு ரூ.40,000 சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ராணுத்தில் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.