“தமிழகத்தில் திமுக தோற்க வேண்டும் என ராகுல்காந்தி நினைக்கிறார்” – அண்ணாமலை!

ஒவ்வொரு தலைவரும் மிககடுமையாக உழைத்துக் கொண்டிருப்பது 21 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக தான் என்று அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் கே.ஆர்.ஜெயராமை ஆதரித்து ஆவாரம்பாளையம் பகுதியல் பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழகத்திற்கு வருவதற்கு ராகுல்காந்தி தயாராக இல்லை, காங்கிரஸ், திமுகவின் கூட்டணி என்பது ஆமை புகுந்த வீடு மாதிரி. சிங்கை சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை ஒரே வேட்பாளர் ஜெயராம்.

மற்றவர்ரகள் பிரசாரம் செய்ய வேண்டுமே என பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுகவின் ஆட்சி காலம் என்பது மிககொடுரமான ஆட்சி காலம். ரிப்பன் வெட்டுவதற்காக கோவை பக்கம் வருகிறார் என்றால் அவர் தான் முதல்வர் ஸ்டாலின். இந்த முறை கொங்கு மண்டலத்தில் 21 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவோம். நேற்று நள்ளிரவில் எஸ்.பி.வேலுமணி அண்ணனும், நானும் சந்தித்து கொண்டோம்.

ஒவ்வொரு தலைவரும் மிக கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பது 21 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக. காங்கிரஸ் கட்சி புதுச்சேரில் 30 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழகத்தில் திமுக தோற்க வேண்டும் என நினைக்கிறார் ராகுல்காந்தி. பத்து ரூபாய் பாலாஜு நமக்கு நல்ல வேலை செய்திருக்கிறார். இந்த முறை கரூரிலிருந்து மொத்த திமுகவையும் ஒழிக்க ஸ்கெட்ச் போட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்.

சிங்காநல்லூர் தொகுதியில் திமுகவினரின் வாக்கு ஜெயராம்க்கு தான். காங்கிரஸ் கட்சி நிராகரிக்கப்பட வேண்டிய கட்சி என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் தொண்டர்களை விட கோஷ்டிகள் அதிகம். காங்கிரஸ் வேட்பாளர் என்னுடன் எப்போதோ எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் போட்டு சுற்றி கொண்டிருக்கிறார். டிஜிபியை மாற்றியாச்சு, தலைமை செயலாளரை மாற்றியாச்சு, வரும் 23-ம் தேதி நீங்கள் முதலமைச்சரை மாற்றி விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.