“ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது” – அதிபர் டிரம்ப்!

ஈரான் போர் முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு படைகள் இடையே கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இப்போரின் எதிரொலியாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடக்கியுள்ளது.
இதற்கிடையே ஈரான் – அமெரிக்கா இரு தரப்பிலும் 2 வாரங்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஹார்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம் அறிவித்தார். மேலும், ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடல் பகுதிகளை முற்றுகையிடப் போவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களுக்கு சந்தித்து பேசியுள்ளார். அப்போது, ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தினால்கூட, அவர்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் ஆகும். நாங்கள் இன்னும் முடிக்கவில்லை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஈரானியர்கள் ஒப்பந்தம் செய்துகொள்ள மிகவும் தீவிரமாக விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஈரானின் திட்டங்களை முறியடிக்க வேண்டிய சூழலில் இருந்தோம். ஈரானின் அணுசக்தித் திறன்களைச் சிதைப்பதற்கு இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது என்று நினைக்கிறேன். ஈரானிடம் அணுசக்தித் திறன் இப்போது இருந்திருந்தால், நாம் அனைவரும் அவர்களை ‘சார்’ என்று தான் அழைத்துக் கொண்டிருப்போம்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.