முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தியை நியமிக்க வேண்டும் – தமிழ்நாடு காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தியை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

சென்னை வேப்பேரி ரித்தர்டன் ரோட்டில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மாநில தலைவவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தேர்தல் பொறுப்பாளர் சவுரவ் கோகாய், மேலிட பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டு ராவ், சிரிவெல்ல பிரசாத், ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் எம்.பி., தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

மேலும் அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், சென்னை மாவட்ட தலைவர்கள் உள்பட 76 மாவட்ட தலைவர்களும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தியை நியமிக்க வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதே போல் மாநில தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்யும் அதிகாரத்தை அகில இந்திய தலைமைக்கு வழங்கியும் தீர்மானமானிக்கப்பட்டது. இந்த தீர்மானம் டெல்லி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, யார் கட்சியில் அதிக அளவில் உறுப்பினர்கள் சேற்கிரார்களோ அவர்கள் பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்படுவார்கள் என கூறினார்.

 

தமிழ்நாட்டில் பாரத் ஜொடோ யாத்ரா வெற்றி பெற்ற காரணம் அந்த அந்த மாவட்ட தலைவர்கள் தான் என்ற அவர், காஷ்மீர் இருந்து கன்னியாகுமரி வரை எந்த சாதாரண மனிதரிடம் கேட்டாலும் ராகுல் தான் தலைவராக இருக்க வேண்டும் என்று கூறுவதாகவும், ராகுலுக்கு நீண்ட நெடிய லட்சிய பாதை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


இதனிடையே, கடந்த 2017-ல் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் அனைத்து மாநிலங்களும் ராகுல்தான் தலைமை பொறுப்புக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தியது. இதையடுத்து ராகுல் காந்தி போட்டியின்றி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகு இடைக்கால தலைவராக சோனியா பதவி வகித்து வருகிறார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விஜய் படத்துக்கான ’செட்’ அமைக்கும் பணிகள் நிறுத்தம்!

Halley Karthik

புதுச்சேரியில் முழு ஊரடங்கு? தமிழிசை செளந்தரராஜன் விளக்கம்

Halley Karthik

”நான் செய்வதையே மு.க.ஸ்டாலின் சொல்கிறார்”- முதல்வர் பழனிசாமி!

Jayapriya