முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குப்பை கொட்டினால் ஆயிரம் அபராதம்; அதனை போட்டுக் கொடுத்தால் ரூ. 500 சன்மானம்

குப்பை கொட்டினால் ஆயிரம் அபராதம், அதனை வீடியோ எடுத்துக் கொடுத்தால் ரூ. 500 சன்மானம் என்ற காட்டம்பட்டி பெண் ஊராட்சி மன்றத் தலைவரின் முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கோவை மாவட்டம், அன்னூரை அடுத்துள்ள காட்டம்பட்டி ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை வீட்டிற்கே வந்து சென்று வாங்கிச் செல்ல தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். அப்படியிருந்தும் பொதுமக்களில் பலர் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டிச் செல்கின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனைத் தவிர்க்கும் வகையில், பெண் ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன் வித்தியாசமான முறையில் விளம்பர போர்டுகளை குப்பை கொட்டப்படும் இடங்களில் வைத்துள்ளார். அந்த போர்டில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், குப்பை கொட்டுபவர்களை வீடியோ படம் எடுத்துக் கொடுத்தால் ரூ. 500 சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அப்பகுதியில் தற்போது குப்பைகள் கொட்டப்படுவதில்லை. முதற்கட்டமாக 4 வார்டுகளில் மட்டுமே இதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கினால் அனைத்து வார்டுகளிலும் தங்களது தூய்மைப் பணி தொடரும் என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“காவி கொடி தேசிய கொடியாக மாறமுடியாது”; கே.எஸ். அழகிரி

Halley Karthik

ஆசிரியைக்கு மாணவர் பளார்…

Halley Karthik

“பூமித்தாய்னு சொல்லாம பூமி தந்தைன்னு சொல்லியிருந்தா ஒருவேளை…” கனிமொழி எம்.பி

Halley Karthik