முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம் தமிழகம்

கரூர் இளம் விஞ்ஞானிகளை பாராட்டிய ராகுல் காந்தி!

கரூரில் ‘இந்தியன் சட்’ என்கிற சாட்டிலைட்டை உருவாக்கிய இளம் விஞ்ஞானிகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாராட்டியுள்ளார்.

கரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் அட்னன், அருண், தனியார் கல்லூரி மாணவர் கேசவன் ஆகியோர்கள் இணைந்நு உலகிலேயே மிகச் சிறிய தீப்பெட்டி அளவிலான 60 கிராம் எடை கொண்ட ‘இந்தியன் சட்’ என்கிற சாட்டிலைட்டை உருவாக்கியுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த சாட்டிலைட் வருகிற ஜூன் மாதம் 21ஆம் தேதி நாசாவில் இருந்து விண்வெளிக்கு அனுப்படுகிறது. இது குறித்த செய்தி ஏற்கனவே நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

தமிழகத்திற்கு சுற்றுப் பயணம் வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தாராபுரத்தில் தான் தங்கியிருந்த ஹோட்டலில், இளம் விஞ்ஞானிகளை அழைத்து சுமார் 45 நிமிடம் அவர்களுடைய ஆராய்ச்சி குறித்து கேட்டறிந்து, வாழ்த்தினார்.

மேலும் இஸ்ரோவில் எந்த மாதிரி உதவி வேண்டுமானாலும் நான் செய்ய தயாராக இருக்கிறேன் என்றும், டிரோன் மூலம் எப்படில்லாம் மரம், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வளர்க்க முடியும் என மாணவர்கள் கூறியதை ஆர்வமுடன் கேட்டறிந்தார்.

மேலும், ட்ரோன்கள் மூலம் சுமார் 50 மீட்டர் சுற்றளவில் விதைகளை விதைக்கவும், தண்ணீர் தெளிக்கவும் முடியும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர். எதிர்கால சந்ததியினருக்கு இந்த நவீன விவசாய கருவிகள் பெரும் உதவியாக இருக்கும் என்றும், இக்கருவிகளை நவீனப்படுத்தி விவசாயத்தை ஊக்குவிக்க முடியும் எனவும் மாணவர்கள் ராகுல் காந்தியிடம் தெரிவித்தனர்.

மாணவர்கள் கூறிய அனைத்தையும் கேட்டறிந்த ராகுல் காந்தி, தன்னாள் முடிந்த அனைத்து விதமான உதவியையும் செய்வதாக மாணவர்களுக்கு உறுதியளித்தார். இதுகுறித்து கூறிய மாணவர்கள், இது போன்ற தலைவர்களின் பாராட்டு எங்களுக்கு ஊக்கமும், ஆக்கமும் அளிப்பதாக தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தேவாலயத்தில் பயங்கர தீவிபத்து; குழந்தைகள் உட்பட 41 பேர் பலி

EZHILARASAN D

இன்று முதல் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு

Halley Karthik

அண்ணா நூலகத்தை சீரமைக்க நடவடிக்கை: அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

Halley Karthik

Leave a Reply