வூஹானில் கொரோனா உருவானது எப்படி..? ஆராய்ச்சியை தொடங்கிய உலக சுகாதார அமைப்பு..

சீனாவின் வூஹான் நகரில் கொரோனா உருவானது எப்படி என்ற ஆராய்ச்சியை உலக சுகாதார அமைப்பின் மருத்துவ குழுவினர் தொடங்கியுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து…

சீனாவின் வூஹான் நகரில் கொரோனா உருவானது எப்படி என்ற ஆராய்ச்சியை உலக சுகாதார அமைப்பின் மருத்துவ குழுவினர் தொடங்கியுள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உலகம் முழுவதும் பரவிய அந்த வைரஸின் கோரப்பிடியில் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா சிக்கி வெளிவர முடியாமல் தவித்து வருகிறது. மேலும், இந்தியா உட்பட பிற நாடுகளும் கொரோனாவுக்கு எதிரான போரில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. முன்னதாக அமெரிக்காவில் கொரோனா அதிவிரைவாக பரவிய சமயத்தில் சீனாதான் கொரோனா வைரஸை உற்பத்தி செய்து உலகம் முழுவதும் பரப்பியது என முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். அத்துடன் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதியை அவர் நிறுத்தி வைத்தார்.

இதைத்தொடர்ந்து சீனாவில் கொரோனா உருவானது எப்படி என்ற ஆராய்ச்சியை விரைவில் மேற்கொள்வோம் என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. ஆனால், அதற்கு சீனா சம்மதம் தெரிவிக்காமல் மறுத்து வந்தது. பின்னர் பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் வூஹானில் ஆராய்ச்சி மேற்கொள்ள உலக சுகாதார அமைப்புக்கு சீனா அனுமதி வழங்கியது. இந்நிலையில், 2 வார தனிமைப்படுத்தலுக்கு பின்னர் உலக சுகாதர அமைப்பு அதிகாரிகள் வூஹானில் ஆராய்ச்சியை துவக்கியுள்ளனர். முதலில் இவர்கள் அங்குள்ள ஆய்வகங்கள், இறைச்சி சந்தை உள்ளிட்டவற்றில் சோதனை மேற்கொள்ள உள்ளதாகவும், அதைத்தொடர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply