தமிழகம் வந்த ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு!

கூடலூர் வந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளான தை முதல்நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழ்நாடு வந்துள்ளார்.

கூடலூர் வந்த ராகுல் காந்திக்கு திமுக சார்பில் எம்.பி ஆ.ராசா, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் பள்ளி நிர்வாகம் உற்சாக வரவேற்பும் அளித்தனர். பள்ளியின் 50வது பொன்விழாவில் கலந்து கொள்ள வந்த ராகுல் காந்திக்கு நீலகிரி மாவட்டத்தின் மண்ணின் மைந்தர்களான தோடர் பழங்குடியினர் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பள்ளி வளாகத்தில் தோடர் பழங்குடியின மக்களுடன் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தார். தொடர்ந்து விழாவில் உரையாற்றி வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.