சவாலான கதாப்பாத்திரம் என்பதால் தான் பராசக்தியை தேர்ந்தெடுத்தேன் – சிவகார்த்திகேயன் பேச்சு……!

நடிப்பதற்கு சவாலான கதாப்பாத்திரம் என்பதால் தான் பராசக்தி திரைப்படத்தை தேர்வு செய்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ’பராசக்தி’. சுதா கொங்கரா இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் ரவி மோகன், ஸ்ரீ லீலா, அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் நாட்டில் இந்தி மொழித் திணிப்பிற்கு எதிராக நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியான பராசக்தி திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 51 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இன்று ‘பராசக்தி’ படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், நடிப்பதற்கு சவாலான கதாப்பாத்திரம் என்பதால் தான் பராசக்தியை தேர்வு செய்தேன். ‘பராசக்தி’ படத்தில் நடித்தது எனது வாழ்நாள் பெருமை. சினிமாவிற்குகாக சில மாற்றங்கள் செய்தே படம் எடுக்கப்பட்டது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கமல்ஹாசன் சார் அமரன் படத்திற்காக அவர் என்னுடன் 2 நிமிடங்கள் பாராட்டி பேசினார், ஆனால் ‘பராசக்தி’ படத்தில் என் நடிப்பை பாராட்டி 5 நிமிடங்கள் பேசினார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  காலை போன் செய்து, இது மிகவும் துணிச்சலான படம் என்றும், இரண்டாம் பாதி சூப்பர் என்று பாராட்டினார்” என்ற சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.