முதல் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுற்றது!

அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் முதல் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுற்றது. அசாம் மாநிலத்தில் 47 தொகுதிகளுக்கு முதல் கட்டத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவின் இறுதியில் 76 புள்ளி 9 சதவீதம்…

அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் முதல் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுற்றது.

அசாம் மாநிலத்தில் 47 தொகுதிகளுக்கு முதல் கட்டத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவின் இறுதியில் 76 புள்ளி 9 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அசாம் மாநிலத்தில் பாஜக., காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. பாஜக இரண்டாம் முறையாக ஆட்சியைகைப்பற்றும் வகையில் அந்த கட்சி தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டது.

மேலும், மேற்குவங்கத்தில் உள்ள 30 தொகுதிகளில் நேற்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கு 82 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் மூன்று முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் ஒருபுறமும், எதிர்கட்சி வரிசையில் பாஜக., காங்கிரஸ்,இடதுசாரி கூட்டணி இரண்டு அணிகளாகவும் போட்டி இடுகின்றன.

மேற்கு வங்கத்தில் எப்படியும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் மேற்கு வங்கத்தில் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.