முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கொரோனா தடுப்பூசி பணி ஆமை வேகத்தில் உள்ளது: ராகுல்காந்தி சாடல்!

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்றுவருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில், “ நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் கவலையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
கடந்த ஆண்டு கொரோனா பரவலின்போது ஈடு செய்ய முடியாத இழப்புகளை நாடு சந்தித்ததாகவும், மிகப்பெரிய தியாகங்களை மக்கள் செய்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளின் தேவை அதிகரித்து வரும் நிலையில் வெளிநாடுகளுக்கு 6 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் அவர் விளம்பரத்துக்காகவே வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றமதி செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசிகளின் உற்பத்தி திறனை அதிகரிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அரசு உதவவேண்டும்.
தற்போதைய சூழலில் தடுப்பூசி ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும். கொரோனா தடுப்பூசி மருந்துகளை மாநில அரசுகளே நேரடியாக கொள்முதல் செய்து கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்” என ராகுல் காந்தி தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

கல்வி நிலையங்களுக்கு அருகில் புகையிலை விற்றால் சிறை

Halley karthi

கர்ப்பிணி பெண்களும் இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் !

Vandhana

“தேசத்துரோக சட்டம் இன்னும் தேவையா?”- உச்சநீதிமன்றம் கேள்வி

Halley karthi