‘கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் தேவை, விருப்பம் என விவாதிப்பது அபத்தம்’ ராகுல்காந்தி!

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் தேவை, விருப்பம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்திருப்பது அபத்தமான கருத்து என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கூறியுள்ளார். கொரோனா தடுப்பூசியை அதை விரும்புபவர்களுக்கு போடாமல்,…

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் தேவை, விருப்பம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்திருப்பது அபத்தமான கருத்து என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசியை அதை விரும்புபவர்களுக்கு போடாமல், அது யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டும் போடவேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்திருந்தார். இதனை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து, தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா தடுப்பூசி விவகாரத்தில், ‘தேவை, விருப்பம்’ என்று விவாதிப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. பாதுகாப்பான வாழ்க்கைக்கான வாய்ப்பை பெற ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தகுதி இருக்கிறது என்றும ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.


சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.