முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் டிஜிபி சுணக்கம் காட்டக் கூடாது – ஸ்டாலின்!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில், டிஜிபி எவ்வித சுணக்கமும் காட்டக் கூடாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்திள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய அரசு அமையும் வரை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு, பொது அமைதியை நிலைநாட்டிட காவல்துறைத் தலைமை இயக்குநர் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தேர்தல் நேரத்தில் நடைபெற்ற மோதல், தற்போது சாதிய வன்மத்துடன் இருவர் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது எனக் கூறியுள்ளார்.
பொதுமக்களின் நிம்மதியைக் குலைக்கும் நடவடிக்கைகள் அரங்கேற அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எத்தனை கருத்து மோதல்கள் தேர்தல் களத்தில் இருந்தாலும், தேர்தலோடு அவற்றை மறந்து விட்டு, தமிழக மக்கள் அனைவரும் சகோதரர்களாக, சமூக நல்லிணக்கத்துடன் மாநிலத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனவே, தமிழ்நாட்டின் காவல்துறைத் தலைமை இயக்குனர், சட்டம்-ஒழுங்குப் பணிகளை நிலைநாட்டுவதில் எவ்வித சுணக்கமும் காட்டக் கூடாது என்றும், சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவோர் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்திட வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:

Related posts

பூத்துக் குலுங்கும் 15 லட்சம் டியூலிப் மலர்கள்!

எல்.ரேணுகாதேவி

மத்திய அரசின் பட்டியலின மாணவர்களுக்கான கல்வி தொகை வழங்கப்படும் – அமைச்சர் கயல்விழி

Gayathri Venkatesan

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவு :தேர்தல் ஆணையம்

Ezhilarasan