காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றால் 1,761 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த வரிசையில் நேற்று முன்னாள் பிரதமர் மன்கோகன் சிங்கிற்கு நேற்றைய தினத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்றைய தினத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை சீராக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று காலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘ கொரோனா தொடர்பான அறிகுறிகள் இருப்பதைத் தொடர்ந்து பரிசோதனை செய்துகொண்டேன். பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னோடு தொடர்பிலிருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கொரோனா தொடர்பான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவும்.’ இவ்வாறு அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.







