கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷகீர் என்பவர் தன் மகனுக்காக புது கைவினை கார் ஒன்றினை செய்து பரிசளித்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அரீகொட் பகுதியைச் சேர்ந்தவர் ஷகீர். இவர் தனது மகனுக்காக மகேந்திரா கார் ஒன்றினை தனது சொந்த வடிவத்தில் வடிவமைத்து உருவாக்கியுள்ளார். இந்த காரின் மதிப்பு ரூபாய் 1.5 லட்சம் ஆகும். மேலும் இந்த காரினை தயாரிக்க தன்னுடய வாழ்வில் ஒரு முழு வருடத்தினை செலவழித்துள்ளார். மேலும் இந்த காரானது சாதாரணமான ஒரு கார் எத்தகைய வசதிகள் கொண்டிருக்குமோ அத்தகைய அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த காரில் கியர் பாக்ஸ், பவர் ஸ்டாரிங், போதுமான அளவு உள்ள இஞ்சீன், முகப்பு விளக்குகள் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன. மேலும் இந்த காரானது மணி ஒன்றுக்கு சுமார் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகம் வரை செல்ல உள்ளது. பொதுவாக நாம் ஒருவருக்கு பரிசுப் பொருள் ஒன்றினை தரும்பொழுது அதிக விளைகொண்ட பொருட்களையே தேடி பரிசு தருவோம். ஆனால் நாமாக கையால் செய்த ஒரு பொருளை மற்றவருக்குப் பரிசளிக்கும் போது அதற்கான மதிப்பே வேறுதான். அந்த வகையில் இந்த கேரள அன்பு தந்தையின் பரிசானது பார்ப்போர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.