உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு முதல் தங்கம்!

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ராஹி சர்னோபாத் தங்கம் வென்றார். உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி குரோஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், மகளிருக்கான 25 மீட்டர் ஏர்…

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ராஹி சர்னோபாத் தங்கம் வென்றார்.

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி குரோஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், மகளிருக்கான 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை ராஹி சர்னோபாத், 39 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.

ராஹி சர்னோபாத் தங்கம் வென்றதன் மூலம், உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில், இந்தியா இதுவரை ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றுள்ளது.

வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனையை விட 8 புள்ளிகள் அதிகம் பெற்று அபார வெற்றி பெற்ற ராஹி சர்னோபாத், உலக சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை ஒரு புள்ளியில் தவறவிட்டார். அடுத்த மாதம் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள ராஹி சர்னோபாத், இந்த வெற்றியின் மூலம் கவனம் ஈர்த்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.