முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

சிவசங்கர் பாபாவுக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்

சிவசங்கர் பாபாவை 3 நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்பட்ட புகாரில், கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள, சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார்.

அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி தரப்பில், விசாரணைக் காவலில் எடுக்க, செங்கல்பட்டு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து விசாரணை செய்த நீதிபதி தமிழரசி, சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க, சிபிசிஜடிக்கு அனுமதி அளித்தார்.

Advertisement:

Related posts

குஜராத்தை இன்று தாக்கவுள்ள டவ் தே!

நீரில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழப்பு!

Vandhana

உள்ளாட்சிக்கு உரிய நேரத்தில் நிதி அளிப்பது அவசியம்: கமல்ஹாசன்

Gayathri Venkatesan