ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக அங்கீகரிக்கக்கூடாது – மக்களவை சபாநாயகரிடம் எம்பி சி.வி.சண்முகம் மனு

தேனி எம்.பி. ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக அங்கீகரிக்கக்கூடாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து அதிமுக எம்பி சி.வி.சண்முகம் மனு அளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுக்குழு தீர்மானத்தின்படி ஓபிஎஸ், மனோஜ்பாண்டியன்,…

தேனி எம்.பி. ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக அங்கீகரிக்கக்கூடாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து அதிமுக எம்பி சி.வி.சண்முகம் மனு அளித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுக்குழு தீர்மானத்தின்படி ஓபிஎஸ், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால், அவர்களை அ.தி.மு.க எம்எல்ஏக்களாக கருதக்கூடாது என சட்டப்பேரவை சபாநாயகரிடம் மனு அளித்தாக குறிப்பிட்டார்.

அதேபோல் தேனி எம்.பி. ரவீந்திரநாத்தை அதிமுக உறுப்பினராக கருதக்கூடாது என மக்களவை சபாநாயகரை சந்தித்து மனு அளித்ததாக கூறினார். ஓபிஎஸ் – டிடிவி தினகரன் இணைந்தது அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் எம்பி சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : பிரபல கே-பாப் இசைக்குழுவில் இருந்து ராப் பாடகர் லூகாஸ் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி!!

மேலும், ஓபிஎஸ் அதிமுகவுக்கு விசுவாசமாக இல்லை என்று விமர்சித்த சி.வி.சண்முகம், அதிமுகவை பிளவுபடுத்தியவர் ஓபிஎஸ் என்று கடுமையாக சாடினார். அதிமுகவின் சின்னத்தை ஓபிஎஸ் முடக்கியதாக குறிப்பிட்ட அவர், கருணாநிதி மீதும் திமுக மீதும் விசுவாசமாக இருப்பவர் ஓபிஎஸ்  என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.