கர்ஜித்தது சிங்கம்… – டெல்லி அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தல் வெற்றி

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதின.

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 25 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 24 ரன்களும் எடுத்தனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்துவீச்சாளர் மிட்செல் மார்ஷ், அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையும் படியுங்கள் : ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக அங்கீகரிக்கக்கூடாது – மக்களவை சபாநாயகரிடம் எம்பி சி.வி.சண்முகம் மனு

இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரைலி ரூசோவ் 37 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.