காலாண்டுத் தேர்வு விடுமுறை: பள்ளிக்கல்வித்துறையின் புதிய உத்தரவு

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறையை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வரும் 30-ம் தேதியுடன்…

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறையை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வரும் 30-ம் தேதியுடன் காலாண்டுத் தேர்வு முடிவடைகிறது.

இந்நிலையில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, அக்டோபர் 1 முதல் 12-ம் தேதி வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை நீட்டிக்கப்படுவதாகவும், விடுமுறைக்குப் பின் அக்டோபர் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.

அதேபோல் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9-ம் தேதி வரை விடுமுறை என்றும், விடுமுறைக்குப் பின் அக்டோபர் 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் ஆணையர் அறிவித்துள்ளார். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி காரணமாகவும், ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையிலும் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.