ஒவ்வொரு நிறுவனமும் வட மாநில தொழிலாளர்களிடம் உங்களுக்கு எந்த பாதிப்பும் பிரச்சினையுமில்லை என்பதை அவர்களிடம் உறுதியளிக்க வேண்டும் என்று பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய பொய் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தின. இதுதொடர்பான செய்திகள் சமூக ஊடக பதிவுகள் வைரலாக பரவிய நிலையில் தமிழ்நாடு காவல்துறை அதை மறுத்து செய்தி வெளியிட்டது. தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு இந்தச் செய்திகளை நிராகரித்து ஆங்கிலத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்களில் நிலையை நேரில் ஆய்வு செய்வதற்காக மாநில கிராம வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்து பீகார் அரசு உத்தரவிட்டது. இவர்கள் இன்று சென்னை வந்தடைந்தனர்.
அண்மைச் செய்தி : மது அருந்தி பைக்கில் வேகமாக சென்ற மாணவர்கள் – விபத்து சிகிச்சை பிரிவில் சேவை செய்ய உத்தரவு
பீகார், ஜார்க்கண்ட் மாநில அதிகாரிகளுடன் தமிழக பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்ட ஆதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது ஜெகநாதன் கூறுகையில், ஒவ்வொரு நிறுவனமும் வட மாநில தொழிலாளர்களிடம் உங்களுக்கு எந்த பாதிப்பும் பிரச்சினையுமில்லை என்பதை அவர்களிடம் உறுதியளிக்க வேண்டும். காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழிலாளர் நலத்துறை, காவல்துறை, வருவாய் துறை சேர்ந்து ஒரு குழு அமைத்துள்ளனர். அவர்கள் முழுவதுமாக ஆய்வுமேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.