புஷ்பா திரைப்பட விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜூன் மீது நடவடிக்கை?

புஷ்பா திரைப்படத்தில் தமிழர்களை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதால், நடிகர் அல்லு அர்ஜூன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ‘புஷ்பா’…

புஷ்பா திரைப்படத்தில் தமிழர்களை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதால், நடிகர் அல்லு அர்ஜூன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ‘புஷ்பா’ என்னும் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தின் தொடக்க காட்சியில் தமிழ்நாடு காவல்துறை பற்றியும், தமிழ்நாடு மக்களை இழிவுப்படுத்தும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி அமைப்பு புகார் அளித்துள்ளது.

இந்த படத்தில் உள்ள குறிப்பிட்ட காட்சிகளை நீக்க வேண்டும் எனவும் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தை சரியாக ஆய்வு செய்யாமல் தணிக்கை அளித்த தமிழ்நாடு தணிக்கை திரைப்பட குழு உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி அமைப்பு புகாரில் குறிப்பிட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.