முக்கியச் செய்திகள் கொரோனா

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு 7 நாட்கள் வீட்டுத் தனிமை கட்டாயம்

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு 7 நாட்கள் வீட்டுத் தனிமை கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரொனா மூன்றாவது அலை பரவி வரும் நிலையில், ஒமிக்ரான் தொற்றும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, இந்தியா வரும் வெளி நாட்டுப் பயணிகள் இனி 7 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டியது கட்டாயம் எனவும், நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தாலும் 7 நாட்களும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனிமைக் காலம் முடிந்ததும் அவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

பொள்ளாச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் – பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதி!

Gayathri Venkatesan

விடுதலையானார் சசிகலா!

Niruban Chakkaaravarthi

நீதிமன்ற உத்தரவை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி: அமைச்சர் ரகுபதி

Arivazhagan CM