நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதில் எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதை ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் கண்டித்துள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது சம்பந்தமாக தமிழ்நாடு எம்.பிக்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முயன்றனர். ஆனால் எம்.பிக்களை சந்திக்க அமித்ஷா மறுத்துள்ளார். இதன் காரணமாக எம்.பிக்கள் அதிருப்தியில் உள்ளன. இச்சூழலில் அனைத்துக்கட்சிக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவது குறித்தும், இது குறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நேற்று ஆளுநரை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழ்நாட்டிற்கு நீட் தேவை. அனைத்து கட்சிக் கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் கலந்துகொண்டு நீட் தேர்வு அவசியம் குறித்து பேசுவார்” என்று பேட்டி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.