நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 160 வருடம் பழமையான கைத்துப்பாக்கி ஒன்றை பிரபல தொழிலதிபர் ஒருவர் பரிசளித்துள்ளார்.
பிரபல தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன். இவர் இப்போது ’புஷ்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் ஜோடியாக, ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அவருடைய பர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் வில்ல னாக மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள புஷ்பா, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன் னட மொழிகளிலும் வெளியாக உள்ளது. இதை சுகுமார் இயக்கி வருகிறார். தெலுங்கை போலவே, அல்லு அர்ஜுனுக்கு மலையாளத்திலும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அவரு டைய ’ஆர்யா’ படத்துக்குப் பிறகு கேரளாவிலும் அதிகமான ரசிகர்களை கொண்டிருக்கும் அல்லு அர்ஜுன் படங்கள் அங்கும் டப் செய்யப்பட்டு வெளியாகின்றன.
அங்கும் வரவேற் பை பெற்று வருகின்றன. இதனால், அல்லு அர்ஜுனை மல்லு அர்ஜுன் என்று செல்லமாக அழைப்பதும் உண்டு. இந்நிலையில், அல்லு அர்ஜுன் சமீபத்தில் துபாய் சென்றிருந்தார். அங்கு அவரைச் சந்தித்த பிரபல கேரள தொழிலதிபர் ரியாஸ் கில்டன் என்பவர், அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றை அளித்துள்ளார்.
A Malayalee businessman named Riyaz Kilton gifted 160 year old pistol to Icon StAAr #AlluArjun during his UAE visit. pic.twitter.com/Lio7LwlKSM
— Manobala Vijayabalan (@ManobalaV) September 29, 2021
அந்த பரிசு வேறொன்றுமில்லை, 160 வருடம் பழமையான கைத்துப்பாக்கித்தான் அது. இதையடுத்து அந்தத் துப்பாக்கியையும் அந்த தொழிலதிபர் அல்லு அர்ஜுனுக்கு வழங்கும் புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.