“கொளுத்த மனமில்லை கொடுத்துவிட்டேன்” – காஞ்சியில் நெகிழ்ச்சி

காஞ்சிபுரத்தில் பெருந்தணக்காரர்களில் ஒருவரான குமணன் மற்றும் புனிதவதி தம்பதியினருக்கு  இரண்டு பெண்கள் ஒரு ஆண். பெருந்தனக்காரராக இருந்தும் படோடோபமாக வாழாமல் சமூக நலனுக்காக குமணன் – புனிதவதி தம்பதியரின் மகன் எழிலன் ஒரு உதாரணமாக…

காஞ்சிபுரத்தில் பெருந்தணக்காரர்களில் ஒருவரான குமணன் மற்றும் புனிதவதி தம்பதியினருக்கு  இரண்டு பெண்கள் ஒரு ஆண். பெருந்தனக்காரராக இருந்தும் படோடோபமாக வாழாமல் சமூக நலனுக்காக குமணன் – புனிதவதி தம்பதியரின் மகன் எழிலன் ஒரு உதாரணமாக திகழ்கிறார்.

கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களுக்கும், டிஎன்பிஎஸ்சி பயிலும் மாணவர்களுக்கும் தகுதியான வகுப்புகள் காஞ்சியில் இல்லை. எழிலன் அவர்கள் தன்னுடைய முயற்சியின் காரணமாக தமிழகம் இலவச கல்வி மையம் என்பதை துவங்கி அங்கு டிஎன்பிஎஸ்சி மற்றும் மருத்துவ பயிலும் மாணவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் என உயர்கல்வி பயிலும் மாணவர், மாணவிகளுக்கு இலவசமாக நடத்தி வருகிறார்.  தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து சிறந்த துறை ஆசிரியர்களை அழைத்து வந்து வகுப்பு எடுத்து வருகிறார்.

இதன்  தொடர்ச்சியாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரிடம் அனாட்டமி பயின்ற மாணவி தங்களுக்கு பிராக்டிகல் வகுப்புக்கு பெண்களின் சடலம் கிடைப்பதில்லை என அழுது வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலை, எழிலன் தனது தாயான புனிதவதியிடம் குடும்பத்தில் சகஜமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது கூறிய பொழுது புனிதவதி நான் இறந்து விட்டால் என்னுடைய சடலத்தை மருத்துவமனைக்கு தானமாக கொடுத்து விடுங்கள் என அப்பொழுதே அருகில் இருந்த மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து உறுதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் புனிதவதி  வயது மூப்பின் காரணமாக நேற்று காலமானார். அவருடைய விருப்பத்திற்கு இணங்க, பெருந்தனக்காரர்களாக, மிகுந்த உறவினர்களைக் கொண்ட அந்த குடும்பத்தினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் ஆலோசனையின் பேரில் நீண்ட நேரம் சடலத்தை வீட்டில் வைத்திருக்காமல் குறிப்பிட்ட நேரத்திலேயே, இவர்களே தனது தாயின் உடலை எடுத்துச் சென்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தானமாக வழங்கியுள்ளனர்.

கண்தானமும் செய்யப்பட்டது.  அதாவது மருத்துவ கல்வி பயிலும் மாணவ- மாணவியர்களுக்கு அவருடைய படிப்பின் சிரமம் கருதி அவர்கள் சிறந்த நடைமுறையில் பயில தனது தாயின் உடலை தானமாக “தாயின் விருப்பத்திற்கு” ஏற்ப வழங்கியதாக எழிலன் அவர்கள் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.