மகாராஷ்டிராவின் புனேவில் 3 வயது சிறுமி 65 வயது முதியவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;
நான் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை . நாங்கள் தற்போது அவளது அஸ்தியைக் கரைப்பதற்காக நாங்கள் வந்திருக்கிறோம்.
இந்த நேரத்தில் அரசியல்வாதிகள் பலர் எங்களைச் சந்தித்து இரங்கல் தெரிவிக்க வருவதாக எனக்கு தகவல்கள் வருகின்றன. என் மகளுக்கு உரிய நீதி கிடைத்து, குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்படும் வரை, எந்த அரசியல்வாதியும் எங்களைச் சந்திக்க எங்கள் வீட்டிற்கு வரக்கூடாது.
இது எங்கள் தாழ்மையான வேண்டுகோள். அந்தக் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே, நாங்கள் எங்களைச் சந்திக்க விரும்பும் எவரையும் சந்திப்போம். அதுவரை, எந்த அரசியல்வாதியும் என் வீட்டிற்கு இரங்கல் தெரிவிக்க வரக்கூடாது. இது எனது தாழ்மையான வேண்டுகோள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.







