#IPL2026 | ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி…!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தி வீழ்த்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 19 ஓவர்களில் 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.

இதனை தொடர்ந்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை விரட்டி களமிறங்கிய கொல்கத்தா அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணியில் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்கரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.