புதுக்கோட்டை ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள அருள்மிகு ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அமைந்துள்ளது…

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள அருள்மிகு ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அமைந்துள்ளது அருள்மிகு ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருக்கோவில்.இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா மிகச் சிறப்பு வாய்ந்ததாகும்.அதன்படி இந்தாண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கோலாகலமாக தொடங்கியது.
தேவாங்கர் மகாஜன சபையின் சார்பாக கரகமஹோத்சவ விழாவினை முன்னிட்டு சிவன்கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து அம்மனுக்கு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு கணபதி ஹோம பூஜைகளும்,அபிஷேக ஆராதனைகளும் காட்டப்பட்டது.தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில்
பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திரண்டிருந்த பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

—-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.