முக்கியச் செய்திகள்தமிழகம்சினிமா

இன்று மாலை வெளியாகிறது PS2 படத்தின் ‘சிவோஹம்’ லிரிக்கல் பாடல்!

பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்றுள்ள ’சிவோஹம்’ எனும் பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படியுங்கள் : பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றம்செய்வோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான இப்படம், புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் முதல் பாகம், ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வெற்றிப் படமாகவே பொன்னியின் செல்வன் முதல் பாகம் கருதப்படுகிறது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் கடந்த மார்ச் 29 ஆம் தேதி வெளியானது. அதேபோல் யூடியூபில் வெளியான அக நக, வீரா ராஜ வீர ஆகிய பாடல்களின் லிரிக்கல் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ”சிவோஹம்” பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

ஆட்கள் இருக்கும்போதே 70 சவரன் நகை கொள்ளை

G SaravanaKumar

புதிய ஜானரில் ஏகே 62; அஜித்துக்காக பிரம்மாண்ட திட்டத்தை தீட்டியுள்ள இயக்குநர் மகிழ் திருமேனி

Web Editor

உலக தலைவர்களுக்கு பரிசளித்த பிரதமர் மோடி!

G SaravanaKumar

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading