ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி புதுச்சேரியில் நூதன போராட்டம்!

புதுச்சேரியில் ஓய்வு பெற்ற முன்னாள் அரசு அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி மணியடித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். புதுச்சேரியில் மத்திய அரசின்பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வுப் பெற்ற அரசு…

புதுச்சேரியில் ஓய்வு பெற்ற முன்னாள் அரசு அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி மணியடித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரியில் மத்திய அரசின்பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வுப் பெற்ற அரசு அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மணியடித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்கும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.9,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 2014ம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற அனைவருக்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உயர் பென்சனை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

—-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.