சாலையில் வீசும் மாங்காய்களால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே சாலையில் வீசிச்செல்லும் மாங்காய்களால் வாகன ஓட்டிகள் அவதிபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காற்றுடன் கூடிய மழை பெய்தது.…

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே சாலையில் வீசிச்செல்லும் மாங்காய்களால் வாகன ஓட்டிகள் அவதிபட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த காற்றால் மா பிஞ்சுகள் பல உதிர்ந்து கீழே விழுந்தன. இதனை சேகரித்து விவசாயிகள் மா ஊறுக்காய் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து விடுகின்றனர். தரமான மாம்பிஞ்சுகளை எடுத்துக்கொண்டு கழிவுகளை திருப்பிதருவதால், அவற்றை சாலையோரங்களில் கொட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர்.

இந்நிலையில், போச்சம்பள்ளி அடுத்த அத்திகானூர் கிராமத்தில் ஆங்காங்கே சாலையோரம் கொட்டிச்சென்ற மாங்காய்களால், இரு சக்கர வாகனங்களில்
செல்வோர் அச்சத்துடன் கடக்கவேண்டியுள்ளது. மாங்காய் கழிவுகளை சாலை
ஓரங்களில் கொட்டி வாகன ஓட்டிகளின் உயிருக்கு அச்சுருத்தல் ஏற்படுத்தாமல்,
பாதுகாப்பாக விவசாய நிலத்தில் கொட்டி அழிக்க கோரிக்கை எழுந்துள்ளது

—கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.