முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

“மனிதநேயம் சாகவில்லை” – அயோத்தி திரைப்பட பாணியில் நிகழ்ந்த மனதை உருக வைக்கும் நிகழ்வு

தமிழகத்தில் இறந்துபோன அஸ்ஸாமை சேர்ந்த இளைஞரின் உடலை மீட்டு, உடனடியா சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்த நிகழ்வு இன்னும் மனித நேயம் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

இந்தியாவின் கடைகோடி மாநிலமான அசாம் மாநிலத்தில் இருந்து சீனா எல்லையின் அருகில் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து வறுமையின் காரணமாக பொருளாதார ஈட்டுவதற்காக சென்னை வந்து தனது செக்யூரிட்டி வேலை பணியை செய்து குடும்பத்தின் வறுமையை போக்க முயற்சித்து வந்துள்ளார் ஜான் குஜூர் என்ற 26 வயது நிரம்பிய வாலிபன்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அவரது குடும்பத்தில் உடன் பிறந்தவர்கள் ஐந்து நபர்கள் இருக்கையில், அனைவரும் வறுமையில் வாழ்ந்து நிலையில் ஜானின் வருமானத்தை நம்பியே அந்த குடும்பம் இருந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த வெயிலின் காரணமாக அவருக்கு உடலில் அம்மை நோய் தொற்று ஏற்பட்டு இருந்ததாக தெரிகிறது. நோய்க்காக அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்தார். எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி அந்த இளைஞர் இறந்துள்ளார்.

அவரது நண்பர் மூலமாக இவர் இறந்த செய்தி அசாமில் உள்ள அவரது குடும்பத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது. குடும்பத்தினர் மகனின் இறந்த செய்தியை கேட்டு செய்வதறியாமல் திகைத்து நின்றனர். மேலும் அவரது உடலை எப்படி அஸ்ஸாமிற்கு கொண்டு வருவது என்ற வழிமுறைகள் தெரியாமல் சிரமப்பட்டுள்ளனர். அவரது குடும்பத்தினர் அசாம் மாநில மாவட்ட ஆட்சித் தலைவரை தொடர்பு கொண்டு நேற்றைய முன்தினம் தனது சகோதரனின் உடலை அஸ்ஸாமிற்கு கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்தனர்.

ஜான் குஜூர் குடும்பத்தினரின் கஜுரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்ட அஸ்ஸாம் மாநில மாவட்ட ஆட்சியார், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தியை தொடர்பு கொண்டு இறந்தவரின் உடலை மீட்டு அஸ்ஸாமிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

இதனையடுத்து, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரில் R-SOYA நிறுவனரும், திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தின் பொறுப்பாளருமான சரவணன் தலைமையில்,“பசியில்லா தமிழகம்” என்னும் அமைப்பை உருவாக்கி, சாலைகளில் திரியும் ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வரும் முகமது அலி ஜின்னாவின் உதவியுடன் சென்னைக்கு வந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த, ஜான் குஜூரின் உடலை, அரசு வழிகாட்டுதல் படி பதப்படுத்துவதற்கான வழிமுறைகளை செய்து, பட்டினப்பாக்கம் காவல்துறையினரின் விமான மூலம் தமிழகத்தில் இருந்து அசாமிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையில் அஸ்ஸாமில் உள்ள அவரது குடும்பத்தினருடன், அவர்களது மொழியில் R-SOYA தன்னார்வலர் திவ்யா பேசி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியும், இங்கு உள்ள சூழ்நிலைகளை விளக்கியும் உடனுக்குடன் தகவல் கொடுத்து வந்தார். ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்வு சமீபத்தில் வெளியான அயோத்தி திரைப்படத்தில் ஒரே நாளில் அரசின் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி இறந்தவரின் உடலை வெளிமாநிலத்திற்கு விமானத்தில் அனுப்பி வைப்பது போல் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதேபோல் ஒரே நாள் காலையில் தனது பணியை துவங்கிய திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தின் தன்னார்வலர்கள் உடன் பசியில்லா தமிழகம் குழுவினர் அன்று இரவு விமானத்தில் அவரது உடலை அனுப்பி வைத்ததை அறிந்து மனித நேயம் இன்னும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது.

இறந்தவரின் குடும்பத்திற்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் உடனடியாக நடவடிக்கை எடுத்த அஸ்ஸாம் மாவட்ட ஆட்சித் தலைவர், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அவர்களுக்கும், R-Soya சரவணன், பசியில்லா தமிழகம் முகமது அலி ஜின்னா, கருணை உள்ளங்கள் அருள் மற்றும் பாலாஜி R-Soya திவ்யா ஆகியோருக்கு அசாமில் இருந்து தமிழகத்திற்கு வந்து பணியாற்றிய அவரது நண்பர்கள் அனைவரும் கண்ணீர் மல்க நன்றி கூறி விடை பெற்று சென்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொலைக் குற்றவாளி யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றம்

G SaravanaKumar

பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு; ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்

Halley Karthik

தமிழ்நாட்டில் 30,000க்கும் கீழ் குறைந்த சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை

Halley Karthik