புத்தாண்டை கொண்டாட்டத்தோடு வரவேற்ற புதுச்சேரி மக்கள்!

புதுச்சேரியில் 2021ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து கடற்கரை சாலையில், போலீசார் குவிக்கப்பட்டனர். தீவிர ரோந்து பணியில்…

புதுச்சேரியில் 2021ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து கடற்கரை சாலையில், போலீசார் குவிக்கப்பட்டனர். தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அசம்பாவிதங்களை தடுக்க ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அங்கு 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. நள்ளிரவில் கடற்கரை சாலையில் திரண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள், உற்சாகமாக ஆடிப் பாடி மகிழ்ந்தனர். மக்கள் கூட்டத்திற்கு நடுவே கேக் வெட்டி புத்துணர்ச்சி பொங்க 2021ஆம் ஆண்டை வரவேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply