சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தையொட்டி பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
“இளைஞர்களின் உள்ளங்களில் தன்னம்பிக்கையை விதைத்து, நமது பண்பாட்டின் பெருமையை உலக அரங்கிற்குக் கொண்டு சென்ற, வீரத் துறவி, சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் இன்று. இந்தப் புனித நாள், நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினமாக பெருமையுடன் கொண்டாடப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சியில் வறுமையும் அடிமைத்தனமும் சூழ்ந்த காலத்தில், ‘இந்த தேசம் உயிரோடு இருக்கிறது’ என்று உலகிற்கு உரக்கச் சொன்னவர். மக்களின் மனதில், ஆன்மீக ஒளி ஏற்றி, கலங்கரை விளக்கமாக வழிகாட்டியவர். அடிமைத்தன சிந்தனையை உடைத்தவர். ‘இந்த தேசத்தின் எதிர்கால சக்தி நீங்கள், என்று இளைஞர்களிடம் தன்னம்பிக்கையை விதைத்த மகான்.
இளைஞர்களுக்கான முன்மாதிரியாகவும், சுயநலமற்ற சேவையின் வடிவமாகவும் திகழும் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளில், அவரது புகழ் போற்றி வணங்குகிறோம்”
இவ்வாறு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.







