தமிழகம்

தமிழகத்தில் களையிழந்த புத்தாண்டு கொண்டாட்டம்!

கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட தடையால் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்தது.

கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், புத்தாண்டு தினத்தன்று காணப்படும் மெரினா இந்தாண்டு வெறிசோடியது. நகர் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தடையை மீறி பொதுவெளியில் கொண்டாட முயன்றவர்களை அவர்கள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால், முக்கிய இடங்கள் அனைத்தும் ஆள் அரவமின்றி காட்சியளித்தன. உணவகங்கள், தங்கும் விடுதிகள் உள்பட அனைத்து இடங்களும் மக்கள் கூட்டமின்றி களையிழந்து காணப்பட்டது. அரசின் தடைக்கு பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சேலம் மாநகர் முழுவதும் தடையை மீறி இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். சாலை தடுப்புகள் அமைத்து அவர்கள் கண்காணித்தனர். மதுபோதையில் சென்ற வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“யாதும் ஊரே யாவரும் கேளீர்”….தமிழ் மொழியின் பெருமை கூறி நெகிழ்ந்த திரௌபதி முர்மு

Web Editor

எந்த கட்சியினருக்கும் ஆதரவில்லை – டி. ராஜேந்தர்

Gayathri Venkatesan

பேரறிவாளன் விடுதலை வழக்கு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Halley Karthik

Leave a Reply