144 தடை உத்தரவால் இயல்புநிலை பாதிக்காது: புதுச்சேரி ஆட்சியர்!

புதுச்சேரியில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் மக்களின் அன்றாட இயல்புநிலை பாதிக்காது என புதுவை தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் விளக்கமளித்துள்ளார். புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி கடந்த 3-ம் தேதி…

புதுச்சேரியில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் மக்களின் அன்றாட இயல்புநிலை பாதிக்காது என புதுவை தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் விளக்கமளித்துள்ளார்.

புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி கடந்த 3-ம் தேதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராஜாங்கம், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் புதுச்சேரியில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு தொடர்பாக, பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


இந்நிலையில், 144 தடை உத்தரவு தொடர்பாக, மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பூர்வா கார்க், உயர்நீதிமன்ற உத்தரவிற்கு விளக்கமளித்துள்ளார். அதில், புதுச்சேரியில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் பணிகளைப் பாதிக்காது. புதுவை மக்கள் வழக்கம்போல் செயல்படலாம் சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கு எந்த ஒரு தடையும் விதிக்கவில்லை. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் வாக்கு மையங்களுக்குப் பொதுமக்கள் குடும்பமாகவும், நண்பர்களுடன் சேர்ந்து சென்று வாக்களிக்கலாம் என அவர் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விளக்கமளித்துள்ளார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.