புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டைச் செல்லும் என மூன்று நீதிபதிகளும், மாறுபட்ட தீர்ப்பை தலைமை நீதிபதி உட்பட இருவரும் வழங்கியுள்ளனர். இத்தீர்ப்பில் அகில இந்திய காங்கிரஸ் நிலைப்பாடு வேறாக இருந்தாலும் சமூகநீதியை கடைப்பிடிக்கவேண்டும் என்பதற்காகப் புதுச்சேரி மாநிலத்தில் நாங்கள் அத்தீர்ப்பை எதிர்க்கிறோம். இதை பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் எதிர்க்கின்றன என அவர் பேசினார்.
மேலும், 9 நீதிபதிகள் அமர்வில் இட ஒதுக்கீடு சமூகத்தின் அடிப்படையிலும் கல்வி அடிப்படையிலும் தரவேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளனர். வருமானத்தை மட்டும் கணக்கில் எடுக்கக்கூடாது என இந்திய அரசியலமைப்பு அமர்வு ஏற்கெனவே தெரிவித்துள்ளது என கூறினார்.
மேல் சாதியினரின் வருமான வரம்பு வருடம் ரூ. 8 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது, பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ. 2.25 லட்சமும், தாழ்த்தப்பட்டோருக்கு ரூ. 3 லட்சம் என வித்தியாசம் உள்ளதால் இதனை எதிர்க்கிறோம். ஐந்து சதவீதம் உள்ள மேல்சாதியினுக்கு பத்து சதவீதம் இட ஒதுக்கீடும், 95 சதவீத இதர சமுதாயத்தினருக்கு 90 சதவீதம் இட ஒதுக்கீடாகிறது என பேசினார்.
ரூ. 8 லட்சம் வருமான உள்ள மேல்சாதியாயினர் அவர்களின் ஐந்து சதவீதத்தில் 2 சதவீதம்தான். சமூக நீதியை காக்கவே முழுமையாக புதுச்சேரி மாநிலத்தில் இதை எதிர்க்கிறோம் என தெரிவித்தவர். புதுச்சேரியில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வெள்ள நிவாரணமும், பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்துக்கு ரூ. 5 ஆயிரம் வெள்ள நிவாரண நீதியாக வழங்க வேண்டும் என நாராயணசாமி வலியுறுத்தினார்.
மேலும், தொடர்ந்து பேசிய அவர் இது வரை புதுச்சேரியில் செண்டாக கவுன்சில் நடத்தப்பட்ட வில்லை, என்றும் மாணவர்கள் செண்டாக்கில் பதிவு செய்துள்ளனர். நீட் தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் நடத்த முடியவில்லை. அதற்கு காரணம் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் பெற முடியாதது தான் என்றும், பா.ஜ.க என்.ஆர் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளதால் முதல்வர் ரங்கசாமி 50% இட ஒத்துக்கிடு தனியார் மருத்துவமனைகள் பெருவதற்கு அவசர சட்டம் அமல்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் மற்றும் சில மாநிலங்களில் மாணவர் சேர்க்கை முடிந்தது ஆனால் புதுச்சேரியில் செண்டாக சேர்க்கை முடியாதது அரசின் கையாலாக தனத்தைக் காண்பிப்பதாக அவர் பேசினார்.







