குடும்ப உறவுகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தில், வரும் 20 ஆம் தேதி மின்னணு கருவிகளைக் (Gadget Free Hour) கைவிட்டு, ஒரு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிடுமாறு வேண்டுகோள விடுக்கப்பட்டுள்ளது.
பேரண்ட்சர்க்கிள் என்ற அமைப்பு முதன்முதலாக 2019இல் #GadgetFreeHour பிரச்சாரத்தைத் தொடங்கியது. இந்தியா முழுவதும் உள்ள குடும்பங்கள், அனைத்து கேட்ஜெட்களையும் அணைத்துவிட்டு, குழந்தைகள் தினமான நவம்பர் 14 அன்று தங்கள் குழந்தைகளுடன் குறைந்தது ஒரு மணிநேரம் செலவிட வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்தப் பிரச்சாரம் நாடு முழுவதும் லட்சக்கணக்கானவர்களைச் சென்றடைந்து பெரும் வெற்றியைப் பெற்றது.
இதற்கு முக்கிய காரணம் நேர்மறையான உறவுகள் மற்றும் நெருங்கியவர்களுடன் இருப்பதன்மூலம் குழந்தைகள் பாதுகாப்பாகவும் அன்பாகவும் உணர்கிறார்கள். உறவுகளை உருவாக்குவதற்கு மொபைல் போன்கள், தொலைக்காட்சி போன்ற கேட்ஜெட்களின் குறுக்கீடுகள் இல்லாமல், நம் குழந்தைகளுடன் தரமான நேரத்தைச் செலவிடுவதும் அவர்களுடன் விளையாட்டில் ஈடுபடுவது, அர்த்தமுள்ள தகவல் பரிமாற்றம் செய்வதும்தான் அவசியம். ஆரோக்கியமான டிஜிட்டல் நடைமுறைகள் மற்றும் கேட்ஜெட் இல்லாத இணைப்பு நேரம் ஒவ்வொரு குடும்பத்தின் வழக்கமான பகுதியாக மாறவேண்டும் என்பது தான். 
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த வகையில், வரும் நவம்பர் 20 (உலக குழந்தைகள் தினம்) அன்று இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை #GadgetFreeHour சமூக முன் முயற்சியில் பங்கேற்பதன் மூலம் அனைவரும் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணையுமாறு பேரண்ட்சர்க்கிள் கேட்டுக்கொள்கிறது. இந்த ஒரு மணி நேரத்தில், குடும்பங்கள் தங்கள் கேட்ஜெட்களை டிஸ்கனெக்ட் செய்து, விளையாடுவது, பேசுவது, சாப்பிடுவது மற்றும் ஒன்றாகச் சிரிப்பது, மகிழ்ச்சியை வேடிக்கையான வழியில் மீண்டும் கண்டுபிடிப்பது என தங்கள் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடவேண்டும் என்று விரும்புகிறது.
புதுச்சேரி அரசும் #GadgetFreeHour முயற்சியில் நம்முடன் கைகோர்த்திருக்கிறது. குறிப்பாக, இது குறித்த விழிப்புணர்வை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் கொண்டுசெல்வதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது என்று பேரண்ட் சர்க்கிள் அமைப்பு கூறியுள்ளது. 
சேர்ந்து விளையாடுவதும் ஒருவருக்கொருவர் நேரத்தைச் செலவிடுவதும் சக்திவாய்ந்த நினைவுகளை உருவாக்குகிறது. மேலும், சில சமயங்களில் அத்தியாவசிய வாழ்க்கைத் திறன்களையும் நீங்கள் இதிலிருந்து பெறுவீர்கள். இந்த ஆண்டு, குடும்பப் பிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் கேட்ஜெட்டுகள் இல்லாத செயல்களில் நேரத்தைச் செலவிடுவதை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும் வகையில், குடும்பங்களுக்கான பல ஆக்டிவிட்டிஸ் மற்றும் போட்டிகளை நாங்கள் நடத்தி வருகிறோம்.
குடும்பங்கள் நேருக்கு நேர் இணையாதபோது, அவர்களால் ஒருவருக்கொருவர் தங்கு தடையின்றி நேரத்தைச் செலவிட முடியாமல் போகும்போது, ஒருவருக்கொருவர் பேசி, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளாவிட்டால், குடும்பத்துக்கான இடத்தை கேட்ஜெட்டுகள் ஆக்கிரமிக்கத் தொடங்கும். அதனால்தான் குடும்பங்கள், கேட்ஜெட்களிலிருந்து டிஸ்கனெக்ட் செய்து ஒருவருக்கொருவர் மீண்டும் இணைய வேண்டியது அவசியமாகிறது என்று பேரண்ட்சர்க்கிள் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் நளினா ராமலக்ஷ்மி தெரிவித்துள்ளார்.







